Pawan Singh gets attacked with stone on stage

Advertisment

போஜ்புரி மொழியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் பவன் சிங். நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும்இசையமைப்பாளராகவும் பயணித்து வருகிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியிலும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசம்மாநிலத்தில் உள்ள பல்லியா என்ற மாவட்டத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது மேடையில் பாடிக்கொண்டிருக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பாடலை பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பாடலை பவன் சிங் பாட மறுத்துள்ளதாகவும்கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அவர்கள் பவன் சிங் மீது குறி பார்த்து சிறியகற்களை வீசித்தாக்கியுள்ளனர்.இதனால் அவர் மேடையில் இருந்தபடியே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாகபரபரப்பு நிலவியதால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. பின்பு போலீசார் தடியடி நடத்திசூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகர் தர்ஷன் ஒரு பேட்டியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரின் 'கிராந்தி' பட இசை வெளியீட்டில் கலந்து கொண்ட போது, அவர் மீது காலனி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.