பொழுது போக்கினையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தளம் - பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 'They Call Him OG' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளம் உலக அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்ட 42 மணி நேரத்தில் 60 நாடுகளிலிருந்து ஒரு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களை அடைந்தது. இந்த சாதனை - ஏற்கனவே அறிமுகமான ChatGPT, Instagram,TikTok, Spotify போன்ற உலகளாவிய பிரபலமான தளங்களை விட.. விரைவாக ஒரு மில்லியன் பயனர்களை எட்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது. அத்துடன் மக்களால் அதிகளவில் விரும்பப்பட்ட சுயாதீன தளமாகவும் OnceMore.io புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இந்த தளம் குறித்தும் , இதன் சிறப்பம்சம் குறித்தும், 'OG' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் இயக்குநர் சுஜித் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த தளத்தின் பிரத்யேகமான உள்ளடக்கத்தை வெளியிடுவதற்காக ரசிகர்களையே 'சிறப்பு விருந்தினர்'களாக அழைப்பு விடுத்தார். இதற்கு ரசிகர்கள் முழு உற்சாகத்தில் பதிலளித்தனர். விளையாட்டுக்கள்- ஒவ்வொரு பயனர்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் அட்டைகள் - தங்களின் உற்சாகத்தின் அனுபவ பகிர்வு - என' OG' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்குள் நுழைவதை அவர்கள் விரும்பினர். இதன் காரணமாக சில மணி நேரங்களுக்குள் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மீம்ஸ்கள்- ரசிகர்களின் ரியாக்ஷன்- ரசிகர்களின் எடிட் செய்யப்பட்ட வீடியோ- புகைப்படங்கள் - அவர்களின் பெயர் மற்றும் பிரத்யேக எண்ணுடன் கூடிய டிஜிட்டல் அட்டைகள் - ஆகியவற்றை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பெருமிதத்துடன் வெளிப்படுத்தினர். இதனால் ரசிகர்களின் டிஜிட்டல் அட்டைகளால் இந்த தளம் நிரம்பி வழிந்தது. அத்துடன் தங்களுடைய பெயர் மற்றும் டிஜிட்டல் எண்ணுடன் கூடிய புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்ஸாக இடம்பெறச் செய்து அதிர வைத்தனர். ரசிகர்கள் கூட்டாக கலந்துகொண்டு 'OG 'திரைப்பட கொண்டாட்டத்தின் பின்னணியை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தையும் தொடங்கினர். அத்துடன் இந்த நிகழ்வை உலகளாவிய திரைப்பட ரசிகர்களின் பங்களிப்புடன் கூடிய மிகப்பெரிய கொண்டாட்டமாகவும் மாற்றினர்.
OnceMore.io - ரசிகர்கள் திரைப்படத்தை பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அதற்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் , அது தொடர்பாக அவர்கள் விரும்பும் கதைகள் மற்றும் உருவாக்கத்தை உடன் இணைத்துக் கொள்ளவும் இதுவரை இல்லாத வகையிலான புதிய பொழுதுபோக்கு சகாப்தத்தை இந்த தளம் உருவாக்கியுள்ளது.
ஏ ஐ ( AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட OnceMore.io எனும் இந்த தளம் - ஏ ஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் புதிய வகையிலான பொழுதுபோக்கினை உருவாக்கி வருகிறது. இந்த தளம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை வழங்குவதற்காக மற்றுமொரு பான் இந்திய அளவிலான திரைப்படத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த சாதனை இந்தியாவிற்கு பெருமிதமான தருணமாக அமைந்திருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த புதுமை மற்றும் ரசிகர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படைப்பாற்றல் இவை இரண்டும் இந்தியாவில் இருந்து தான் வர இயலும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.