ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு படம் ‘ஓஜி’. டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரியா ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பட ரிலீஸை முன்னிட்டு ஹைதராபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேடைக்கு படத்தில் இருக்கும் கதாபாத்திரம் போலவே உடை அணிந்து கொண்டு கையில் வாலுடன் எண்ட்ரி கொடுத்தார். அப்போது அந்த வாலை அவர் சுழற்றிய போது அவரது பின்புறம் நின்றுகொண்டிருந்த பாதுகாவலர் ஒருவர் மீது வெட்டப் பார்த்தது. அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/23/185-2025-09-23-16-42-34.jpg)
பின்பு ஒரு துணை முதல்வர் இது போன்ற வாலுடன் நடப்பதை யோசித்து பாத்திருக்குறீர்களா, ஆனால் என்னால் முடியும், ஏனென்றால் இது ஒரு படம் என்பதால் எனப் பவன் கல்யாண் பேசினார். அப்போது மழை கடுமையாக பெய்தது. கொட்டும் மழையிலும் அவரது ரசிகர்கள் அமர்ந்து அவர் பேசியதை பார்த்தனர். இதனிடையே பவன் கல்யாண் சுற்றி இருப்பவர்களை பார்க்காமல் வாலை சுழற்றிய செயல் பலரது கண்டனத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/23/184-2025-09-23-16-42-08.jpg)