Advertisment

ஆந்திரா தேர்தல்...நடிகர் பவர்ஸ்டார் பவன் கல்யானுக்கு இந்த நிலைமையா...? 

pawan kalyan

Advertisment

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 16 இடங்களில் வென்ற தெலுங்குதேசம் இந்த முறை ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை. அதுபோல சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 88 தொகுதிகள் தேவை. ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 175 ல் 144 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. எனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியமைக்க உள்ளது. மேலும் இதில் கஜூவாகா தொகுதியில் போட்டியிட்ட ஜன சேனா கட்சி தலைவர் நடிகர் பவர்ஸ்டார் பவன் கல்யாண் இதுவரை 50000 வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

pawan kalyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe