/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/103_11.jpg)
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக்கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பண்ணை வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட பவன் கல்யாண், உரிய சிகிச்சை எடுத்து வருகிறார். பவன் கல்யாண் சிகிச்சை எடுத்துவரும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அப்புகைப்படத்தைப் பகிர்ந்து, விரைவில் பவன் கல்யாண் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)