/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_88.jpg)
தமிழில், தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த ஆண்டு 'ஜீ 5' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படம் 'வினோதய சித்தம்'. அபிராமி மீடியா ஒர்க்ஸ்தயாரித்திருந்த இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருந்தார். சமுத்திரக்கனி இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.
தெலுங்கில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜ் நடிக்கிறார்கள். மேலும், தமிழில் இயக்கிய சமுத்திரக்கனியே தெலுங்கிலும் இயக்குகிறார். இந்த நிலையில் இப்படத்தின்படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை நடிகர் சாய் தரம் தேஜ் தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்து, "இது ஒரு சிறந்த நாள். என் குரு பவன் கல்யாணுடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது வாழ்நாள் ஒரு கனவு" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சமுத்திரக்கனி இயக்கிய 'உன்னைச் சரணடைந்தேன்', 'நாடோடிகள்', 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட படங்களை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். அந்த வரிசையில் தற்போது நான்காவது முறையாக 'வினோதய சித்தம்' படத்தை ரீமேக் செய்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)