Advertisment

"உங்களின் அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்" - தமிழ் நடிகரை பாராட்டிய பவன் கல்யாண்!

hhiohi

தெலுங்கின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கிய பிறகு படத்தில் நடிப்பதில்லை என்று விலகியிருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியான 'பிங்க்' படத்தை தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தற்போது பவன் கல்யாண் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், இவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பவனுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார். அதில்...

Advertisment

"அன்பார்ந்த சிவகார்த்திகேயன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துகள். உங்களின் 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் எனக்கு ரொம்பபிடிக்கும். எத்தனையோ முறை அதைக் கண்டு ரசித்திருக்கிறேன்" என பதிவிட்டார். இதை கண்ட சிவகார்த்திகேயன், "உங்கள் பதிலைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது சார். 'ஊதா கலர் ரிப்பன்' பாடல் உங்களுக்கு பிடித்திருந்தது என அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். நேரம் ஒதுக்கி அன்பை ஏற்றுக் கொண்டமைக்கும், உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய நன்றி சார்" என பதில் ட்வீட் செய்துள்ளார்.

Advertisment

ACTOR PAWAN KALYAN actor sivakarthikeyan pawan kalyan sivakarthikeyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe