Advertisment

பிறந்தநாள் கொண்டாட்டம்... பலியான ஐந்து ரசிகர்கள்... 

pawan kalyan

நேற்று நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில்அவருடைய ரசிகர்கள் ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல் நாள் இரவு பவனுக்கு கட்டவுட் வைக்கும்போது சரிந்து விழுந்ததில் ரசிகர்கள் மூன்று பேர் இறந்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான போனி கபூர், மறைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்து, இரங்கல் தெரிவித்தார். அதேபோல பவனும் ஜனசேனா கட்சி சார்பாக இறந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் நிதியுதவி செய்வதாக தெரிவித்தார்.

Advertisment

மேலும், தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரை சேர்ந்த ரசிகர்கள் ராகேஷ், ரோஹித், ஷபீர், சந்து மற்றும் பவன் என்ற 5 நண்பர்கள், காரில் சென்று நடிகர் பவன் கல்யாணின் பிறந்த நாளை நண்பர்களுடன் நள்ளிரவு கொண்டாடினர். பின்னர் இரவு வீடு திரும்பும் போது, வசர கொண்டா எனும் இடத்தில் எதிரே வந்த லாரி இவர்களின் கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

தனது ரசிகர்கள் இறந்த செய்தியை அறிந்த பவன் கல்யாண், அவர்களின் குடும்பத்தாருக்கு இது ஈடு இணையில்லா இழப்பு என்றும், அவர்களது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமெனவும், தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் ஜன சேனா கட்சி சார்பில் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

pawan kalyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe