
தெலுங்கின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கிய பிறகு படத்தில் நடிப்பதில்லை என்று விலகியிருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியான 'பிங்க்' படத்தை தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில்,பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ், அனன்யா நடித்துள்ளனர்.
கடந்த வருடமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இன்று பவனின் பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டரும் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. பவனின் பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில்அவருடைய ரசிகர்கள் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே மேலும் பவன் நடிக்கும் 27 ஆவது படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை க்ரிஷ் இயக்கி வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.
@PawanKalyan గారు, #PSPK27 పదిహేన్రోజుల షూటింగ్ ప్రతిక్షణం టీం అందరికీ గొప్ప జ్ఞాపకంలా కదులుతుంది..
చిరస్థాయిగా నిలిచే విజయం కంటికి కనిపిస్తుంది..
ఇందుకు కారణం మీరు, మీ ప్రోత్సాహం, మీ సహృదయం..
ఎప్పటికీ ఇలాగే కోట్లాది జనం శుభాకాంక్షలు అందుకుంటుండాలని ఆశిస్తూ #HBDPawanKalyanpic.twitter.com/PCVhIO3uxm
— Krish Jagarlamudi (@DirKrish) September 2, 2020
இதனைப் பகிர்ந்தக்ரிஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், “பதினைந்து நாட்களும் படப்பிடிப்புக் குழு அனைவருக்கும் அழகான நினைவுகளாக நகர்ந்துள்ளன. நிலையான வெற்றி கண்முன் தெரிகிறது. இதற்குக் காரணம் நீங்களே, உங்கள் ஊக்கமும், உங்கள் கனிவுமே. எப்போதும் இது போலவே கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)