Advertisment

"சாதியற்ற சமுதாயத்தை விரும்புபவர்" - சமுத்திரக்கனியை பாராட்டிய பிரபல நடிகர்

pawan kalyaan wishes samuthirakani

Advertisment

இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் சமுத்திரக்கனி. நடிப்பை தாண்டி இயக்குநராகவும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 'நாடோடிகள்', 'நிமிர்ந்து நில்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது அவர் கடைசியாக இயக்கிய 'வினோதய சித்தம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். தெலுங்கில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜ் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சமுத்திரக்கனிக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் ஜனசேனாகட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மிக திறமையான இயக்குநர், எழுத்தாளர், நடிகர் சமுத்திரக்கனிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சமுத்திரக்கனி மனித உறவுகளை நம்புபவர். அதனால்தான் அவரது படங்களில் அதன் கருத்துக்கள் காணப்படுகின்றன.

சாதியற்ற சமுதாயத்தை விரும்புபவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கென தனி அங்கீகாரம் பெற்றவர். நடிகராக தேசிய அளவில் விருது பெற்றார். என்னுடைய 'பீம்லா நாயக்' படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது இவரது இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகளை பெற மனதார வாழ்த்துகிறேன். மூகாம்பிகை தேவியின் பக்தரான சமுத்திரக்கனிக்கு அந்த ஜகத்காரணி அருள் எப்போதும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

samuthirakani ACTOR PAWAN KALYAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe