pavithra jayaram chandrakanth passed away

Advertisment

தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர்கள் சந்திரகாந்த் மற்றும் பவித்ரா ஜெயராம். இருவரும் இணைந்து திரினாயினி என்ற சீரியலில் நடித்து வந்தனர். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பிறகு காதலாக மாறி ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் இதற்கு முன்பாக வேறுதிருமணமாகி விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் தங்களது குடும்பதினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருந்த போது, ஆந்திரா மெகபூபா நகர் அருகே விபத்துக்குள்ளானது. அதில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சந்திரகாந்துக்கு கடுமையாக காயம்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றிருந்தார். பின்பு வீட்டிற்கு திரும்பிய அவர் பவித்ராவின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இன்னும் இரண்டு நாள் காத்திரு” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு எமோஷ்னலாக பவித்ரா குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்திரகாந்த் தெலுங்கானாவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலி இறந்தவுடன் சில தினங்கள் கழித்து காதலனும் இறந்துள்ளது தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.