/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1541.jpg)
கெளதம்மேனன்இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 'சில்லுனுஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் 'ஏஜிஆர்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் பெல்லாரி கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கமுக்கிய கதாபாத்திரங்களில் கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோ க்ரீன்'ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ்ரீமேக்ஆகும். இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனிடையே இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு புகைப்படத்துடன் கூடிய ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்று வந்த சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)