Skip to main content

'பத்து தல' - சிம்பு வெளியிட்ட அப்டேட்

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

'Pathu Thala' 'Pathu Thala' - Update released by Simbu- Update released by Simbu

 

'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம்மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதனிடையே கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். மேலும் கௌதம் கார்த்திக், கௌதம்மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 

 

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகி வந்த நிலையில் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறோம் எனச் சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி தற்போது 'பத்து தல' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இதனைச் சிம்பு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ரூ.1 கோடி...' - சிம்புவுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

simbu corona kumar issue

 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. 

 

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். 

 


 

Next Story

மறு உருவாக்கம் செய்த ஏ.ஆர். ரஹ்மான் - வீடியோ வைரல்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

ar rahman recreate troll video

 

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் 'பத்து தல'. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.  

 

இப்படத்தில் சாயிஷா நடனத்தில் இடம்பெற்ற 'ராவடி' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பாடலைப் பாடியது குறித்து காமெடியாக ஒரு யூட்யூப் சேனல் வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சினேகன் பாடகியை கவனித்துக் கொண்டிருக்கையில் பாடகி வார்த்தையைத் தவறாகப் பாடியிருப்பது போல் அமைந்திருந்தது. 

 

அந்த வீடியோவை உண்மையிலேயே ஏ.ஆர். ரஹ்மான், சினேகன் மற்றும் பாடகி சுபா ஆகியோர் மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.