Pathu Thala Namma Satham Glimpse released

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம்'பத்து தல'.இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தநிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகபடக்குழு அண்மையில் அறிவித்தது.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'நம்ம சத்தம்' நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலைஏ.ஆர். ரஹ்மான் பாட விவேக் வரிகள் எழுதியுள்ளார்.மேலும் நாளை (03.02.2023) சிம்புவின் பிறந்தநாள் என்பதால்இப்பாடல் அவர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.