Skip to main content

டிக்கெட் இருந்தும் உள்ளே விட மறுப்பு; திரையரங்கில் தீண்டாமை - ஜி.வி. பிரகாஷ் கண்டனம்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

pathu thala movie Untouchability in theater  GV Prakash condemned

 

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தைக் காண சிம்பு ரசிகர்கள் உள்ளிட்ட சினிமா ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் கூடியுள்ளனர்.

 

அந்த வகையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் படம் பார்க்க டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பாசி மணி விற்பவர்கள் என்பதை அறிந்த திரையரங்க ஊழியர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அங்கே இருந்த ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டங்கள் எழுப்பி வந்தனர். 

 

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள்  அனைவருக்கும் சொந்தமானது" எனப் பதிவிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரிந்த காதல் ஜோடி; விமல் படத்தில் இணைந்து பாடிய பாடல்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
gv prakash and saindhavi sung song together by the film Vimal!

தமிழில் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷும் பிரபல பாடகி சைந்தவியும் 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் இணைந்து பல்வேறு பாடல்கள் பாடியுள்ளனர். அவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

கடந்த சில மாதங்களாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வதாகத் தகவல் பரவி வந்தது. பின்பு இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்தக் காதல் ஜோடியின் பிரிவு கோலிவுட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரிந்த காதல் ஜோடி இணைந்து பாடிய பாடல் ஒன்று வெளியாகவுள்ளது. 

‘கன்னி மாடம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் போஸ் வெங்கட், விமலை வைத்து ‘மா.பொ.சி’ படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இப்படத்தில், கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ‘மா.பொ.சி’ எனத் தலைப்பு வைத்திருந்த இப்படத்திற்கு திடீரென்று ‘சார்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூலை 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.  ‘பனங்கருக்கா’ எனத் தொடங்கும் இப்பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். மேலும், இப்பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். கருத்து வேறுபாட்டில் காதல் ஜோடியான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியிருக்கும் இப்பாடலுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

Next Story

‘தயாராகுங்கள்’ - தங்கலான் பட அப்டேட்டை கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
GV Prakash said about thangalaan movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒவ்வொரு மாதமும் தள்ளி போய், இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தப்பாடில்லை. 

இந்த நிலையில், தங்கலான் படத்தின் பி.ஜி.எம் ஸ்கோர் நிறைவடைந்ததாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தங்கலான் பின்னணி இசைக்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. என்னுடைய பெஸ்ட்டை இப்படத்திற்கு கொடுத்துள்ளேன். என்ன மாதிரியான படம்!!!.... இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். என்ன ஒரு அற்புதமான டிரெய்லர்!!.... வியப்பூட்டக்கூடிய டிரெய்லர் விரைவில் உங்கள் மனதை கவரவுள்ளது. தங்கலான் படத்திற்காக இந்திய சினிமா தயாராகுகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.