pathu thala movie release on dec 14

Advertisment

கெளதம்மேனன்இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 'சில்லுனுஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் 'ஏஜிஆர்' என்றகேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம்கார்த்திக், கௌதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்டூடியோக்ரீன்ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ்ரீமேக்ஆகும். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின்ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பத்து தல படம் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில்தான் வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பத்து தல படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டதால்சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.