pathu thala Glimpses video released

Advertisment

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்குஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதனிடையே 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கும்'பத்து தல' படத்தில் கௌதம்கார்த்திக்குடன்இணைந்துநடித்து வருகிறார். கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்டூடியோக்ரீன்ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளைமுன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு'பத்து தல' படத்தின் க்ளிம்பஸ்வீடியோவைபடக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஜி.ஆர் என்ற கேங்ஸ்ட்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மாஸ் ஆக்ஷன்காட்சிகள் நிறைந்த இந்த க்ளிம்பஸ்வீடியோ சிம்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமைந்துள்ளது. மேலும் பத்து தல படக்குழு சிம்புவின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.