/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgchgfchgfch.jpg)
சிம்புவின் அடுத்தபடம் குறித்த புதிய அப்டேட்டை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில், சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த மாத இறுதியில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. 'பத்து தல' எனப் பெயரிடப்பட்டுள்ள சிம்புவின் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பதாகவும், இதில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)