மீண்டும் இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம்!  ‘சைக்கோ’ 2வது பாடல் வெளியானது...

உதயநிதி ஸ்டாலின் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'சைக்கோ'. அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ilaiyaraja with sid sriram

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாக இருந்த இப்படம், பின்னர் சில காரணங்களால் விலக, பிசியின் உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல இந்த படத்திலிருந்து உன்ன நெனச்சு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்திருந்தது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். பாடலாசிரியர் கபிலன் இந்த பாடலை எழுதியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் ‘நீங்க முடியுமா’ என்று வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் சித் ஸ்ரீராம் பாட, கபிலன் எழுதியிருக்கிறார்.

இப்படம் ஜனவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/4GsHTaqvYKk.jpg?itok=yiKDCBS1","video_url":" Video (Responsive, autoplaying)."]}

ilaiyaraja psycho sidsriram
இதையும் படியுங்கள்
Subscribe