‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம். பின்பு பசங்க படம் மூலம் பிரபலமானார். மேலும் அப்படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றிருந்தார். பின்பு விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, தனுஷின் வேங்கை, விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 

Advertisment

இதையடுத்து கோலி சோடா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு முதன்மை கதாபாத்திரத்திலே அதிக கவனம் செலுத்தி வந்தார். சினிமாவைத் தாண்டி ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்த நிலையில் ஸ்ரீ ராம் தனது நீண்ட நாள் காதலியான நிகில் ப்ரியாவை திருமணம் செய்துள்ளார். திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.