Advertisment

சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை கரம் பிடித்தார் ‘பசங்க’ கிஷோர்

pasanga movie actor Kishore married tv actress Preeti kumar

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான 'பசங்க' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிஷோர். இப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றிருந்தார். தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Advertisment

அண்மையில் ப்ரீத்தி குமார் என்ற சின்னத்திரை நடிகையை காதலிப்பதாக அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில், ப்ரீத்தி குமாரை கிஷோர் தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

celebrity marriages Actress actor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe