Advertisment

"அந்தப் பட வாய்ப்பை நான் தவறவிட்டிருக்கக் கூடாது..." வருந்தும் பார்வதி நாயர்!

Parvati Nair

Advertisment

‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர், சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அதில் ஒரு ரசிகர், "‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நெருக்கமான காட்சிகள் இருந்த காரணத்தால் நீங்கள் நடிக்க மறுத்துவிட்டீர்கள் என்பது உண்மையா? அந்த வாய்ப்பை மறுத்ததற்காக வருந்துகிறீர்களா?" எனக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த பார்வதி நாயர், “அது உண்மைதான். அந்தப் படத்தை நான் தவறவிட்டிருக்கக் கூடாது. அதேநேரத்தில், உங்களுக்காக எது உள்ளதோ அது உங்களை வந்தடையும். ஆகையால், எனக்காக உள்ள சிறந்த படங்கள் நிச்சயம் என்னை வந்தடையும்" எனபதிலளித்தார்.

parvati nair
இதையும் படியுங்கள்
Subscribe