
மலையாளம், தமிழ் படங்களில் விதவிதமான பாத்திரங்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் நடிகை பார்வதி திருவோத்து, விரைவில் வெளியாகவுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில், 'இன்மை' பகுதியில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாக நிலையில், இப்படம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து பேசியுள்ளார். அதில்...
"நடிகர் சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னைவிட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்துகொள்ள முடியும். படப்பிடிப்பில் இது எனக்கு நடிப்பில் மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. இப்படம் ஒரு அறுசுவை விருந்தாக இருந்தது. நடிகர் சித்தார்த் அவர்களும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் ஸூம் கால் மூலம் ஆன்லைனில், சிலமுறை பேசி, இப்படம் குறித்து ரிகர்சல் செய்துகொண்டோம். இணையவெளியில் நிகழ்ந்தஅதே மாயம் அப்படியே படப்பிடிப்பிலும் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்களுமின்றி, மிக எளிதாக இந்தப் படப்பிடிப்பு நிகழந்தேறியது. முன்னணி கலைஞர்கள் பங்குபெற, அத்தனை பேரின் அர்ப்பணிப்பில், வெகு இயல்பாக, ஒரு அற்புத படைப்பு உருவாகியுள்ளது. திரைத்துறை நண்பர்கள் இணைந்து தங்கள் சக தோழர்களின் நலனுக்கு இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சி" என்றார்.
‘நவரசா’ மனிதஉணர்வுகளானகோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளைக் கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளைக் கூறும் ஆந்தாலஜி திரைப்படம். ஜஸ்ட் டிக்கெட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)