Skip to main content

வலுக்கும் எதிர்ப்பு - நயன்தாராவிற்கு ஆதரவாக பார்வதி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
parvathy about nayanthara annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் என பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே அன்னபூரணி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டூடியோஸ், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது எனவும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் புண்படுத்தப்பட்டதற்கும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம் எனவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு கடிதம் எழுதியிருந்தது. 

இந்த நிலையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நீக்கபட்டதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஒரு ஆபத்தான முன்னுதாரணம் அமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டு தணிக்கை செய்வது குறித்து விமர்சித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.