Advertisment

'பார்ட்டி' படம் ஓடிடியில் நேரடி ரிலீசா..? -தயாரிப்பாளர் விளக்கம்!

ggib

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி' படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்ற வருடமே ரிலீசுக்கு தயாராக இருந்தது. இதையடுத்து சில காரணங்களால் இப்பட ரிலீஸ் தேதி அவ்வப்போது தள்ளிபோய்க்கொண்டே இருந்து வந்த நிலையில், தற்போது இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இப்பட நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்...

Advertisment

"M / s அம்மா கிரியேஷன்ஸ் மேசையிலிருந்து...

எங்கள் நிறுவனத்திலிருந்து வரவிருக்கும் திரைப்படமான "பார்ட்டி" தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து, நேரடி OTT யில் வெளியாகவுள்ளதாக செய்தி ஊடகங்களில் வரும் செய்தியை நாங்கள் கவனித்தோம். இதுபோன்ற திட்டங்கள் எங்களிடம் இல்லை. இதுபோன்ற சலசலப்புகள் ஆதாரமற்ற வதந்திகளை நம்பவேண்டாம். இந்த செய்தியால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். பார்ட்டி திரைப்பட வெளியீடு குறித்து சரியான நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வர விரும்புகிறோம். எனவே, எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தியேட்டர் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்" என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

venkat prabhu party movie
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe