iygfj

ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்க, கே.பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'.

Advertisment

Advertisment

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் நடிகர், இயக்குனர் பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து 'பொன்மகள் வந்தாள்' படக்குழு போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளனர். இதைக் கண்ட நடிகர் பார்த்திபன்.....

''கரும்பும் குடுத்து,

கடிக்க கூலியும் குடுத்து-வாயைத்

துடைக்க towel-ம் குடுத்து,

வாழ்த்துச் சொல்லி thanks-ம்...

ஹூம்! என்னான்னு நான் ஜொள்ள?

நன்றி!''

எனச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.