Advertisment

"கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன்" - 'இரவின் நிழல்' அப்டேட்டை வெளியிட்ட பார்த்திபன் 

parthiban's iravin nizhal movie upadte out now

‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். படம் முழுவதும் தனி ஒருவராகத்திரையில் தோன்றி பார்த்திபன் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், சென்ற ஆண்டுக்கான தேசிய விருதை இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="25a3a98d-ee7a-4c75-8911-1c099bc469c6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_64.jpg" />

Advertisment

இந்நிலையில் படத்தின் பாடல் குறித்ததகவலைநடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில். இரவின் நிழல் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர் ரஹ்மான் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுத சொன்னார். கேட்ட நொடி முதல்கிறங்கிக் கிடக்கிறேன் ஹையில் இறங்கி வந்து அந்த ட்யூனுக்குவரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது. சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல்,முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு) வரும்போது ருசிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ar rahman iravin nizhal ACTOR PARTHIBAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe