parthiban tweet about mike controversy

Advertisment

அண்மையில் 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே மேடையில் இந்த நிகழ்வுக்காக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மன்னிப்பு கோரியிருந்தார். அதன் பிறகு இச்சம்பவத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் மைக்கை பிடிக்காமல் விட்ட ரோபோ சங்கரிடமும் நடிகர் பார்த்திபன் வீடியோ வெளியீட்டு மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இச்சம்பவம் குறித்த பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ சங்கர், மைக்கால் பிடிபட்டவர் பார்த்திபன், கடைசியில் முத்தமிட்டார் என்று குறிப்பிட்டுள்ள போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment