Advertisment

"பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், மோடிஜீக்கு ஜே" - பார்த்திபன்

parthiban talks about modi

அமீர் கான் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'. இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

Advertisment

இந்நிலையில் பார்த்திபன் 'லால் சிங் சத்தா' படத்தின் சிறப்பு காட்சியை அண்மையில் பார்த்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "லால் சிங் சத்தா படம் பார்த்து கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன். வெறுப்பும் எதிர்ப்பும் உள்ள சமூகத்திற்கு இந்தப் படத்தின் மூலம் அன்பைப் பரப்பியுள்ளீர்கள். அன்பை, அர்ப்பணிப்பை, காதலை, கடமையை கண்ணியத்தை இதை வட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா?

Advertisment

வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி செய்யும் தால் மக்கானி (Dal Makhani) சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம்.தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க, நான் அனுப்ப தேசிய விருதுக்கா? என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், 'மோடிஜீக்கு ஜே' என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது" என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

pm modi ACTOR PARTHIBAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe