parthiban shared a news about iravin nizhal ott release

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்திய சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட 13 படங்களில் 'இரவின் நிழல்' படமும் ஒன்று. ஆனால் இறுதியில் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வுபெற்றது. இது தொடர்பாக தனது கருத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார் பார்த்திபன். இதனிடையே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பார்த்திபன்.

Advertisment

அந்த வகையில் தற்போது பார்த்திபன் இரவின் நிழல் பட ஓடிடி குறித்து பேசியுள்ளார். அதாவது, ரசிகர் ஒருவர் பார்த்திபனின் ஒரு பதிவிற்கு இரவின் நிழல் பட ஓடிடி குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்த பார்த்திபன், "தியேட்டர்ல 40 நாள் Ottட்டும்(ஓட்டிட்டும்) பாக்காம,ஓடிடில தான் பாப்பேன்னு விரும்புர நண்பர்கள் திரும்பர பக்கமெல்லாம் கேள்வி கேட்பது சுகமான சுமை or கனமான சுகமே! வயிற்றிலிருந்து இறக்கினாலும் நெஞ்சில் சுமக்கும் தாய் போல் நானும்... ஓடிடியில் இறக்கிவிட முயல்கிறேன்.வரும் அதிவிரைவில்" என குறிப்பிட்டுள்ளார். எனவே இரவின் நிழல் பட ஓடிடி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment