Advertisment

கார்த்தி சிதம்பரத்திற்கு நன்றி சொன்ன பார்த்திபன்!

bdsg

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக படம் முழுவதும் நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. சென்ற ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றது.

Advertisment

இந்த முயற்சிக்கு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலுள்ள மற்ற மொழிபிரபலங்களும் நடிகர் பார்த்திபனைப் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் இப்படத்தைச் சமீபத்தில் நெட்பிலிப்ஸ் தளத்தில் பார்த்த காங்கிரசின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சமூகவலைத்தளத்தில் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், ''ஒத்த செருப்பு சைஸ் 7'' நீண்ட காலத்திற்குப் பிறகு நான் ரசித்த ஒரு தமிழ்ப் படம். பார்த்திபனின் அற்புதமான நடிப்பு'' எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தப்பதிவைப் பார்த்த நடிகர் பார்த்திபன், ''மிக்க நன்றி. அறிவால் சூழப்பட்ட (கார்த்தி படித்த சிதம்பரம்) ஒரு குடும்பத்தின் வாரிசு பாராட்டுவது பெருமகிழ்ச்சி'' எனப் பதிவிட்டு கார்த்திக் சித்தமபாரத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

ACTOR PARTHIBAN parthiban
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe