
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அடுத்ததாக தன் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, பிரபுதேவா, மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை குறித்து பார்த்திபன் பேசும்போது... "இப்படத்தை எடுக்க நான் தயாராக இருக்கிறேன். சரியான தயாரிப்பாளர் அமைவதற்காக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே 2வில் நான், சமுத்திரகனி, கிஷோர் என்று 10 பலமான நடிகர்களுடன் களம் இறங்குகிறேன். எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் என் பாணி. அது இந்த படத்தில் இருக்கும். என்னுடைய வழக்கமான படத்தை பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியான ஒரு விஷயமும் படத்தில் உண்டு" என்றார்.