பதவி விலகிய பார்த்திபன்...பரபரப்பில் தயாரிப்பாளர் சங்கம்...காரணம் என்ன ?

parthiban

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் அணியில் துணைத் தலைவராக நடிகர் பிரகாஷ்ராஜும், செயலாளர்களாக கதிரேசணும், துரைராஜும், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபுவும் பதவி வகித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனரும், நடிகருமான ரா.பார்த்திபன் கூடுதல் துணை தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து சங்கத்தை மேற்கண்ட நிர்வாகிகளே இது நாள் வரை சங்கத்தை கவனித்து வந்த நிலையில் பார்த்திபன் தனது துணைத்தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், அதற்கான காரணத்தை பற்றியும் பார்த்திபன் இதுவரை எதுவும் வாய் திறக்காதது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இளையராஜா 75வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் பார்த்திபனுக்கு அதிருப்தி இருந்து வந்தாக சமீபத்தில் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FEFSI parthiban tamilcinemaupdate theaterstrike vishal
இதையும் படியுங்கள்
Subscribe