இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியமிற்கு உயரிய நன்றி. உரிய நடவடிக்கைகள் உடனடியாகஎடுத்தமைக்கு. தான் இணைந்திருக்கும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தான் மந்திரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் ஆரோக்கியத்தை போலவே தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் கண்ணும் கருத்துமாக பேணி காக்கும் மருத்துவம் மீறிய மன மகத்துவம் நிறைந்தவர். அவருக்கு என் மனப்பூர்வ நன்றி" என பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் சுப்பிரமணியன், இன்று காலை இயக்குநர் விக்ரமனின் வீட்டிற்கு சென்று,தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், கால் விரலை கூட அசைக்க முடியாமல் இருந்த விக்ரமனின் மனைவியைப் பார்த்தார். பின்பு,முதல்வரின் அறிவுறுத்தலின் படி 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களைக்கொண்டு அவருக்குமருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.