vdbzdbdzs

Advertisment

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74.

பாண்டுவின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகரும், இயக்குனருமான ரா.பார்த்திபன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,"அஞ்சலி செலுத்தக் கூட என் மனம் தடுமாறுகிறது. அடுத்தடுத்து எத்தனை துயர்கள். விவேக், கே.வி.ஆனந்த் இன்று பாண்டு இப்படி என் நண்பர்களும், அறிமுகமே இல்லாத பல உயிர்களும் பிரிய... இன்னும் எழுதக் கூட.... தெரியவில்லை!" எனப் பதிவிட்டுள்ளார்.