/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parthi-im.jpg)
இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர்.ஹவுஸ்புல், ‘கதைதிரைக்கதை வசனம் இயக்கம்',போன்ற படங்கள்அதற்குஉதாரணம். இவர் கடைசியாகஒத்த செருப்புபடத்தைஎழுதி இயக்கியிருந்தார்.
பார்த்திபன்ஒருவர் மட்டுமேநடித்திருந்த இப்படத்தை,அவரேதயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்குமுன்புஒருவர் மட்டுமேநடித்து வெளிவந்தபடங்கள்வெறும் பனிரெண்டுதான்.பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக்ஆப்ரெக்கார்ட்ஸ்புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விருது விழாக்களுக்கும்தேர்வு செய்யப்பட்டது. ஒருவர் மட்டுமேநடித்திருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால்ரசிகர்களை ஈர்த்தஇப்படம், முதலில் திரையரங்கில் வெளியானது பின்பு ஓ.டி.டியில் வெளியானது.
இன்று முதல்கரோனாவினால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஆனால் புது படங்கள் எதுவும்வெளியாகவில்லை. ஏற்கனவே வெளியாகிய படங்கள், மீண்டும் திரையிடப்படுகின்றன. அந்த வரிசையில், பார்த்திபனின் ஒத்த செருப்புபடம் மீண்டும் தீபாவளியன்றுதிரையரங்கில் வெளியாகவுள்ளது. இத்தகவலைதனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்பார்த்திபன். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்,"தீபாவளிக்கு மீண்டும் ‘ஒத்த செருப்பு’ திரையரங்குகளில்... -வந்தபோது பார்க்கத் தவறிவிட்டோம் என வருத்தப்பட்ட நண்பர்களுக்காகவும், வெளியானபோது இன்னும் வரவேற்பு தந்திருக்கலாமே என ஆதங்கப்பட்ட எனக்கும் -என்னை ஊக்கப்படுத்தினால் இன்னும் புதுமை படைப்பை தர முயல்வேன்" எனகூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)