Skip to main content

அமைச்சர் விஜய பாஸ்கருக்கு பரிசளித்த பார்த்திபன்!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை சந்தித்து சானிடைசர் பரிசளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

gdgs

 

 

''தனித்திரு
விழிப்புனர்ச்சியோடிரு 
ஆரோக்கியத்துடனிரு!

சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன். பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன். இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன். அந்த நல் யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்'' என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போவும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது” - தேவயானி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
devaiyani speech azhagi re release press meet

தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோரது நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான படம் அழகி. உதய கீதா தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அதிக நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்து 2004ஆம் ஆண்டு டிலீஸ் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இப்படம் 22 வருடம் கழித்து இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதையொட்டி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தேவயானி, “22 வருஷம் கழித்து எங்க படம் ரிலீஸாவது ரொம்ப சந்தோஷமான தருணம். இது ஒரு அதிசயம். இது நடக்கும் என நினைத்ததே கிடையாது. ஆனால் ஏதோ ஒரு மேஜிக் நடந்துக்கிட்டு இருக்கு. அப்போவும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது. இதை நாம் கொண்டாட வேண்டும். 

இதே போல் அழகான படங்களை ரீ ரிலீஸ் செய்து இந்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் ஏதாவது அவுங்க கற்றுக் கொள்ள முடியும். தங்கர் பச்சானுடன் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளேன். அவருக்கு நன்றி” என்றார். 

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
nn

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

அதேபோல் விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரனையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையைக் காட்டுகிறது என்கின்றனர் அந்த பகுதி ர.ரக்கள்.