Skip to main content

இது வெறும் தர லோக்கல் படம் இல்ல, தரமான லோக்கல் படம்...! பார்த்திபன் அடித்த பன்ச் 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

 

parthiban

 

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது விழாவில் விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசும்போது....

 

"எஸ் ஃபோகஸ் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என நினைப்பவன் நான். கதை கேட்கும்போது நிறைய நல்ல கதைகளை முதல் 10 நிமிடங்களிலேயே உணர்ந்திருக்கிறேன். இதில் அந்த உணர்வு கிடைத்தது. இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம். எம்.ஜி ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் தொப்பி அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரம் மிகவும் நல்லவர். யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதால் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையை கேட்டு மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலய்யா, எஸ்வி சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம் எஸ் பாஸ்கர் போக்கியிருக்கிறார் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ட்ரைலர் கமெர்சியலாக இருந்தாலும் படம் மிகவும் நல்ல கருத்துகளை கொண்டது' - ஜி.வி பிரகாஷ்குமார்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

 

gv prakash

 

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட ஜி.வி பிரகாஷ்குமார் பேசியபோது.... "பாபா பாஸ்கர் அவருடைய வாழ்வியலில் இருந்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார். ட்ரைலர் கமெர்சியலாக இருந்தாலும் படம் மிகவும் நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது. சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம். பார்த்திபன் சாரை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு ராஜாவாக நடிக்கும் காட்சிகளில் நேரடியாக பார்த்தேன். அதற்கு பிறகு இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய கற்றுக் கொண்டேன். ஏற்கனவே பாலா சார், ராஜீவ் மேனன் சார் படங்களில் என்னை வேறு விதமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த படத்தில் இன்னொரு பரிமாணத்தில் நடித்திருக்கிறேன் என நம்புகிறேன்" என்றார்.

 

Next Story

'நான் இதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது' - பார்த்திபன் 

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் 'குப்பத்து ராஜா' படத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பாலக் லால்வானி ஆகியோருடன் யோகி பாபு, பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி நடிகர் பார்த்திபன் கூறும்போது...

 

kupathu raja

 

"குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிக்கிறேன். முக்கியமாக ஜி.வி.பிரகாஷுடன் தான் என் மோதல்கள் இருக்கும். இதை பற்றி சொன்னால், நான் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா என்ற ஒரு கேள்வி எழலாம். அதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது. எல்லோரும் ஜிவி பிரகாஷ் இசை மாயஜாலாத்தை கண்டு பிரமித்து போவார்கள். ஆனால் அவரின் உள்ளார்ந்த நடிப்பு திறன்களை கண்டு வியந்தேன். பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பை அவர் மிக சாதாரணமாக வழங்கியதை நான் பார்த்தேன். கூடுதலாக, சண்டைக் காட்சிகளில் நிறைய முன்னேறியிருக்கிறார். இந்த படத்தில் அது குறித்து அதிகம் விவாதிக்கப்படும். நான் எப்போதுமே பரபரப்பான திரைக்கதைகளை ரசிப்பவன். பாபா பாஸ்கர் அவரின் நடனத்தை போலவே திரைக்கதையையும் மிகவும் புதிதாக, வேகமாக வடிவமைத்திருந்தார். கதை சொல்லும் போது மிகவும் ரேஸியாக இருப்பதை உணர்ந்தேன், டப்பிங்கின் போது அவர் என்ன எழுதினாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்ததை பார்த்ததில் மகிழ்ச்சி" என்றார்.