parthiban in 'iravin nizhal' trailer released

‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ஒரு பாடல் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

Advertisment

இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல், பக்தி, கொலை உள்ளிட்ட பல உணர்வுகள் மற்றும் நிகழ்வுகளை பற்றி பேசும் விதமாக வெளிவந்துள்ள இந்த ட்ரைலர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் யூ-ட்யூபில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளத்தில் இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது.

Advertisment