Advertisment

பிறந்தநாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? - ரா. பார்த்திபன் 

geshshsehs

இசைஞானி இளையராஜா இன்று (02.06.2021) தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான ரா. பார்த்திபன் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

Advertisment

"பத்திரிகையாளர் கவிதா இசையராசா குறித்து Skype-ல் சில வார்த்தைகள் பேச முடியுமா என்றார். “SKY-ஐப் பற்றி Skype-ல் பேசித் தீருமா?” என்றேன். கண்ணுக்குள் கண்டுவிடும் பரப்பில்லை வானம். கண்டதையெல்லாம் ஒப்புக்கொள்வதுமில்லை நம் மனம். என் ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி. தரை மார்க்கமாக மாநிலங்கள் கடக்கலாம், கடல் மார்க்கமாக அண்டை நாடுகள் கடக்கலாம், ஆகாய மார்க்கமாக கண்டங்கள் கடக்கலாம்- but பக்தி மார்க்கமாகவே மாய சக்திகள் உணரலாம்.உணராத ஒரு சக்தியை நான் பக்தியோடு பார்க்கிறேன், அப்படியாவது அறிய முடிகிறதா என ஆராய்கிறேன். அப்படி என் ஆராதனைக்குரியவர் பெரியவர் திரு. இளையராஜா அவர்கள். (பக்தி = அகம் நோக்கி ஊர்தல்) பிறந்த பயனையே அவரின் இசையால் அடைந்தவன், பிறந்தநாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? ஆனாலும் ஏதேதோ சொல்ல முற்பட்டேனே... அதுதான் அறியாமை என்பது" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

Ilaiyaraaja ACTOR PARTHIBAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe