Advertisment

பேட்ட வில்லனை ‘வச்சி செய்ய’ இருப்பதாக பார்திபன் ட்வீட்!

ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அதை ஹிந்தியில் ரீமேக் செய்ய முயற்சி செய்து வருகிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

parthiban

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் ‘ஒத்த செருப்பு’. இந்த படம் ஒரு புதுமையான முயற்சியாக எடுக்கப்பட்டது. அது என்ன என்றால் படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒருவர் மட்டுமே நடித்திருப்பார். சோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட படம் இது என்றாலும் இந்த வெற்றி படங்கள் லிஸ்டில் இது இணைந்துகொண்டது. பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினர். பல விருது விழாக்கள் இந்த படம் கலந்துகொண்டு விருதுகளை குவித்தது.

இந்நிலையில் பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது அவரை நேரில் சந்தித்து ஒத்த செருப்பு படத்தை ஹிந்தியில் உருவாக்குவதற்கான பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளார் பார்த்திபன். இது தொடர்பாக தனது ட்விட்டரில், “Os7-ஐ ஹிந்தியில் நவாசுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது....” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து முழு நீள சிங்கிள் ஷாட் படமாக‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இதனிடையே ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக் செய்ய முயல்வதாகவும் அறிவித்திருக்கிறார்.

Bollywood kollywood nawazuddin siddique parthiban
இதையும் படியுங்கள்
Subscribe