/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_294.jpg)
‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். படம் முழுவதும் தனி ஒருவராகத்திரையில் தோன்றி பார்த்திபன் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும்சென்ற ஆண்டுக்கான தேசிய விருதை இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் மடியில்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது பிறந்தநாளை திரைப்பிரபலங்களுடன்இணைந்து கொண்டாடியுள்ளார். இதில் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவரது மனைவி, இயக்குநர்கள்பாரதிராஜா, பாக்யராஜ், ரஞ்சித், தா.செ ஞானவேல், நடிகர்கள் பிரபு தேவா, விஜய்சேதுபதி,இசையமைப்பாளர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டுநடிகர் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓய்வு பெற்றநீதியரசர் சந்துருவுக்குஅவரது ஓவியத்தை நடிகர் பார்த்திபன் பரிசாக அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)