Advertisment

"அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதித் தீரா!" - பார்த்திபன் உருக்கம்!

vsgfsgfsd

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை நோய்க்கான சிகிச்சையில் இருந்த நிலையில், தமது 99வது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர், இயக்குனர் ரா.பார்த்திபன் இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"தீரா-அவ்வளவு எழுதியும். கீ.ரா-மனதை விட்டு மறையாது அவ்வெழுத்துகள்! நான் கொடுத்த cake-ஐ ருசித்து விட்டு” பட்ஷனம் சுவையாக இருந்தது. பெயர்தான் தெரியவில்லை”என்றார். தன் மண்ணை பற்றி காதலோடு நிறைய எழுதிய கீ.ரா மீது நான் கொண்ட மரியாதையும், அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதித் தீரா!" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

ACTOR PARTHIBAN
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe