Advertisment

 இந்தியன் 2 உடன் மோதும் பார்த்திபன்!

Parthiban collides with Indian 2!

Advertisment

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், இந்தியன் 3 அதாவதுமூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

அதே வேளையில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, ‘டீன்ஸ்’ படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து இப்படத்தின், டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டி.இமான் இசையமைத்திருக்கும் ‘டீன்ஸ்’ படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பார்த்திபனின் ‘டீன்ஸ்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisment

ACTOR PARTHIBAN indian 2
இதையும் படியுங்கள்
Subscribe