Advertisment

“விஜய் அழைத்தால் போகமாட்டேன்” - பார்த்திபன் ஸ்ட்ரிக்ட்

parthiban about vijay politics

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக புதுச்சேரி பொதுப் பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசினார்.

Advertisment

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது விஜய் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு, “இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முதலமைச்சராக ஆக ஆசைப்படலாம். அதனால் அவரை வரவேற்போம். முதலில் அவர் அவருடைய வேகத்துக்கு போகட்டும்.அவருக்குத் தடை இருக்குமா என்றால் நிச்சயம் இருக்கும். அவர் தாண்டப் போவது சாதாரண இடமில்லை. ஜல்லிக்கட்டிலேயே அவ்வளவு தடைகளைத் தாண்டி தான் மாடு பிடிக்க வேண்டியிருக்கிறது. ஆட்சியை பிடிப்பது பெரிய விஷயம். அதனால் வரும் தடைகளை தாண்டினால் தான் தலைவனுக்கு அழகு.

Advertisment

ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தால் தான் அடுத்த இடத்துக்கு வர முடியும். எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களும் அப்படித்தான் செய்தனர். அவர்களை விட நாங்கள் செய்கிறோம் என்றுதான் சொல்லி வருவார்கள். அதனால் ஆளுங்கட்சியை பார்த்து பம்பி அவர்கள் நல்லது செய்கிறார்கள் என்று சொன்னால் முடியாது. அப்படி சொல்லி எந்த பக்கமும் சாயாமல் ஒரு தலைவர் இருக்க முடியாது. நான் எந்த கட்சி சார்ந்தவனும் கிடையாது. விஜய்யை பற்றி பேசுவதால் அவரிடம் இரண்டு பெட்டி வாங்கிவிட்டதாக அர்த்தம் கிடையாது. யார் வந்தாலும் நான் அப்படித்தான் பேசுவேன். அதே போல் விஜய் கூப்பிட்டாலும் கண்டிப்பாக போகமாட்டேன். என்னுடைய அரசியல் நோக்கம் என்பது ஏற்கனவே இருப்பது இல்லாமல் வேறு ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அது தான் அரசியலில் நல்ல விஷயம். அது என்னால் பண்ண முடியாது. என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டும்தான்.

விஜய் இதுவரை இரண்டு மேடைகளில்தான் ஏறியிருக்கிறார். முதல் மேடையில் அவர் தவறில்லாமல் பேசியது பயங்கர ஆச்சரியம். நம்ம நாடு பேசி பேசியே முன்னுக்கு வந்த நாடு. அரசியல் என்றால் பேச்சு என்று அர்த்தம். அந்த பேச்சுக்கும் விஜய் தகுதியானவராக இருக்கிறார். கூட்டம் எல்லாம் வோட்டாக மாறுமா என்பது ஆச்சரியம் தான். இதுவரைக்கும் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இவரும் வந்திருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” என்றார்.

ACTOR PARTHIBAN actor vijay tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe