Advertisment

“ஊர் விலகி பிரிவு என்ற முடிவை...” - பார்த்திபன் பதிவு

parthiban about separation

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார்.

Advertisment

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன், தொடர்ந்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது பிரிவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “பிரிவு: இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே… குடைக்குள் மழை நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.

Advertisment

நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானு இருவரும் தங்களது பிரிவை அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR PARTHIBAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe