
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெற்றது. இதையடுத்து '52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று வதந்தியை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், மற்ற சமூக வலைதளங்களிலும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து, இந்த வதந்திக்கு பார்த்திபன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், “நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை. எதிர்மறையான செய்திகளை பரப்ப இது போல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம், மக்களுக்கும் பரப்புவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023