"100 வது நாளாக டப்பிங்" - கவுதம் மேனன் ரெஸ்ட் எடுக்க பார்த்திபன் விருப்பம்

parthiban about dhruva natchathiram

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

இப்படம் குறித்து லிங்குசாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் மேஜிக்கை திரையில் பார்க்க ஆவலாக இருப்பதாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மேலும் வருகிற நவம்பர் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவித்தது.

இந்த நிலையில் இப்படத்திற்கு 100வது நாள் டப்பிங் குறித்து அவரது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள எக்ஸ் பதிவில், "காலையில் ஒரு கப் தேனீர் கூடவே ஒரு ஸ்கிரிப்ட்(நடிக்கவோ/இயக்கவோ) மூழ்கிவிட போதுமெனக்கு. ‘துருவிநட்சத்திரம்’ படப்பிடிப்பில் ஜிவிஎம்-முடன் ‘வ’ ‘வி’ ஆனது விபத்து அல்ல. துருவித் துருவி ஒவ்வொரு வார்த்தையாக 'so of all the peopleU will break the law sir?' என நான் பேசியதில் Break என்ற வார்த்தை bake என கேட்பதாகக் கூறி,100 வது நாளாக டப்பிங். சிரத்தையுடன் சிரமத்துடன் சிறப்பாக வந்துவிட முயலும் ஜிவிஎம்-மின் படம் ரிலீஸ் ஆக ஜிவிஎம்-மும் விரைவில் relieve ஆக விருப்பம்" என குறிப்பிட்டுள்ளார்.

ACTOR PARTHIBAN Dhruva Natchathiram gautham menon
இதையும் படியுங்கள்
Subscribe