தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகி வருகிறது ‘இட்லி கடை’ படம். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, பொல்லாச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடந்தது.  கிராமத்து பிண்ணனியில் உருவாகும் இந்தப் படம், அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘என்ன சுகம்’ பாடல் லிரிக் வீடியோவுடன் சமீப்த்தில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பார்த்திபன் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. 

57

Advertisment

இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் சாரி, வந்து விடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.