Advertisment

“பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க” - பார்த்திபன் நக்கல்

parthiban about bjp

சென்னையில் நடந்த ஓட்டல் திறப்பு விழாவில் நக்கீரன் ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்பு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய நக்கீரன் ஆசிரியர் ஓட்டலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

பின்பு பேசிய பார்த்திபன், “உள்ள நுழையும்போது பார்த்திபனா வந்தேன். ஆனா ரிப்பன் கட் பண்ணும்போதுஎன்னை செல்வமணி போல் ஆக்கிட்டாங்க. தலை நிறைய ரோஜா. செல்வமணி தான் ரோஜாவை தலையில தூக்கி வச்சிட்டு ஆடுவார். இங்க இருக்கிற எல்லாமே ரசனையோடு இருக்கு. உலகத்தில் மக்கள் தொகை தோன்றுவதற்கு காரணம் ஃபர்ஸ்ட் நைட் தான். ஆனா ஃபர்ஸ்ட் டே-வை இவ்ளோ சிறப்பா கொண்டாடினது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எல்லா தரத்து மக்களும் நல்ல விதமான ரசனையுடன் கூடிய ஒரு ஹோட்டலில் சாப்படணும்னு ஆசைப்படுறாங்க. விலை பத்தி கவலைப்படுவதில்லை.

Advertisment

காஃபியின் மேல இருக்கிற நுரையில் தாமரை பூவெல்லாம் போட்ருப்பாங்க. அதை பார்த்தாலே டேஸ்டாயிருக்கும். ஏதோ பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க. அதுல இலை மாதிரியும் போட்ருப்பாங்க” என நக்கல் கலந்து நையாண்டியுடன் பேசினார். மேலும் அவர் தற்போது இயக்கி வரும் டீன்ஸ் படம் குறித்து சொன்ன அவர், “எப்பவுமே வித்தியாசமான முயற்சிலாம் பண்ணுவேன். ஆனா இந்த முறை ரொம்ப வித்தியாசமா கலக்‌ஷனுக்காக படம் பண்ண போறேன். இதுவரை பண்ண முயற்சிகள் எல்லாம் பரிட்சார்த்தமானதா இருக்கும். அதிலிருந்து வித்தியாசப்பட்டுஇந்த படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார்.

ACTOR PARTHIBAN nakkheeran editor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe